ந்திரன் ஏதோ ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்சத்திரப் பாதத்தில் இருப்பார்.

அதுவே நாம் பிறந்த நட்சத் திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்கிறோம்.

பிறந்த நட்சத்திரம் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் நம் உடலை இயக்கு பவர்.

Advertisment

கர்ம வினைகளுக்கேற்ப நம் உடல் அனுபவிக்கும் நன்மை களுக்குக் காரணமானவர்கள் இந்த ஜென்ம நட்சத்திரம் மற்றும் அதன் அதிபதி ஆவார்கள்.

குறிப்பாக ஆலய வழிபாட் டிற்கு மிகமிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபடவேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள முடியும்.

Advertisment

hh

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள்தான் அனைத்து வித தோஷங் களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்களாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழி பாட்டால், எந்தவொரு தெய்வமும் அருள் செய்தே தீரவேண்டும் என்பது பிரபஞ்சத்தின் ரகசியம்.

ஜென்ம நட்சத்திர வழி பாட்டில் உள்ள ஆன்மிக ரகசியமே இதுதான்.

எனவே, ஜென்ம நட்சத்திர வழிபாட்டு வாய்ப்பை ஒருபோதும் தவறவிட்டு விடாதீர்கள். குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் ஜாதகத்தின்மூலம் (தீமைகள் அகல, தோஷம் விலக) எந்த கடவுளை வழிபடவேண்டும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு வழிபாடு செய்தால் கர்மவினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பலன்கள்

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தானங்கள் செய்தால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்துவந்தால் அவரை கண்திருஷ்டி நெருங்காது.

தடைப்படும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கேற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்புப் பூஜைகள் செய்வது நல்லது.

பணமில்லாத பட்சத்தில் கவலைப்பட வேண்டாம். உடலால் கோவிலுக்கு உபகாரம் செய்வது மிகவும் நல்லது.

வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம் செய்தால் கூடுதல் பலனைப் பெற முடியும்.

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை நாட் காட்டியில் குறித்து வைத்துக்கொண்டு, அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தா லும் சிறிதுநேரம் ஒதுக்கி குலதெய்வ ஆலயத் திற்கு அல்லது எதோ ஒரு ஆலயத்திற்குச் சென்று, தனது ஜென்ம நட்சத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்வதால் நம் கஷ்டங் கள் ஓரளவு குறைந்து நல்லதே நடக்கும்... மற்றும் ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

அப்படி செல்லமுடியாத பட்சத்தில் பசுவைப் பார்த்தால் மாட்டிற்கு அறுகம்புல் கொடுத்து ஒரு நமஸ்காரம் செய்யுங்கள்; போதும். அதுவே சகல தெய்வங்களையும் வணங்கியதற்குச் சமம்.

செல்: 94443 93717